‘புட்டின்’ போருக்கு புறப்பட்டு விட்டதாக ‘பைடன்’ அறிவிப்பு(வீடியோ)
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் நாட்களில் தாக்குதல் நடக்கலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உளவுத்துறையின் கணிப்பின்படி, யுக்ரெய்ன் தலைநகர் கீவ் குறிவைக்கப்படும் என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்
வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சியில் உரையாற்றிய, ஜனாதிபதி பைடன், ரஸ்ய படைகள் "வரும் வாரத்தில், எதிர்வரும் நாட்களில் யுக்ரைனைத் தாக்க திட்டமிட்டு உத்தேசித்துள்ளன என்று அமெரிக்கா "நம்புவதற்கு" காரணம் இருப்பதாகக் கூறியுள்ளார்
ரஸ்யா இன்னும் இராஜதந்திரத்தை தேர்ந்தெடுக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், அந்த நாடு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதற்கு இன்னும் இடமுள்ளதாக தெரிவித்தார்
எனினும் ஆக்கிரமிப்பு தகவலை ரஸ்யா மறுத்துள்ளது.
இதேவேளை யுக்ரெய்ன் படையினரும் ரஸ்ய ஆதரவு படைகளின் பகுதிகளின் மீது தாக்குதல்களை நடத்திய நிலையில் குறித்த பகுதிகளை சேர்ந்த மக்கள் ரஸ்யாவுக்கு இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.