கிரிமியா பாலம் தகர்ப்பு - உக்ரைன் மீது புடின் பயங்கரவாத குற்றச்சாட்டு
ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவுக்கான பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார், அத்துடன் இது "பயங்கரவாத செயல்" என்று கூறினார்.
உக்ரைனின் உளவுப் படைகள் ரஷ்யாவின் சிவில் உள்கட்டமைப்பில் முக்கியமான ஒரு பகுதியை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி புடின் கூறினார்.
ரஷ்யாவின் விசாரணைக் குழுவின் தலைவர் அலெக்சாண்டர் பாஸ்ட்ரிகின் உடனான சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
வெடி விபத்தில் 3 பேர் பலி
பாலத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லொறி ஒன்று வெடித்துச் சிதறியதில் பலியானவர்கள் அருகில் இருந்த காரில் இருந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரயில் மற்றும் சாலை பாலம் 2018 இல் திறக்கப்பட்டதுடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கான முக்கிய விநியோக பாதையாகவும் காணப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் குடிமக்கள் மற்றும் சில வெளிநாட்டு மாநிலங்கள் தாக்குதலுக்கான தயாரிப்புகளுக்கு உதவியதாக அலெக்சாண்டர் பாஸ்ட்ரிகின் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.