புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டோரை வரவேற்கும் நிகழ்வு
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வானது இன்றையதினம் (11.06.2025) புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் ச.கிருசாந்தன் தலைமையில் பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து பிரதேச சபையின் மண்டபத்தில் பிரதம விருந்தினர்களின் உரை இடம்பெற்று தபவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்களின் அறிமுகமும் இடம்பெற்றிருந்தது.
பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள்
22 உறுப்பினர்களைக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 11 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 4, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 2, தொழிலாளர் காங்கிரஸ் கட்சி சார்பாக 1, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பாக 1, சுயேட்சை குழு வண்டில் சார்பாக 2, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக 1 உறுப்பினர் என 22 உறுப்பினர்கள் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள நிலையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேலாயுதம் கரிகாலன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினுடைய தவிசாளராகவும் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சுந்தரம் பரந்தாமன் உப தவிசாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி எஸ்.சத்தியரூபன், ஒட்டிசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி ஆ.பகீரதன், உலகளந்த பிள்ளையார் ஆலய குருக்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
















திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam
