காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! நீதியமைச்சருக்கு பணிப்புரை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தனக்கு பணித்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மரண சான்றிதழ் வழங்கி அந்த பிரச்சினைக்கு முடிவு காண திட்டமிட்டுள்ளதாக கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திடம் தமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நீதியமைச்சின் நடமாடும் சேவையை புறக்கணிக்குமாறு வலியுறுத்தியுள்ள யாழ்.மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் நம்பிக்கை இழந்து நிற்கும் தமக்கு சர்வதேசமே தீர்வை பெற்று தர வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
நீதி அமைச்சின் ஏற்ப்பாட்டில் வடமாகாண ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான அணுகுவழி நடமாடும் சேவை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அவர்கள் இதனை கூறியுள்ளனர்.