புஸ்ஸலாவ தனியார் தேயிலை தொழிற்சாலையில் தீப்பரவல்(video)
புஸ்ஸலாவ - ரயிலன் தோட்டத்தில் தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
நேற்று இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் முயற்சிகளில் புஸ்ஸலாவ பொலிஸாரும், பொது மக்களும் ஈடுபட்டிருந்தனர்.
பொலிஸாரின் சந்தேம்
தீ வீபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியபடவில்லை.
மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
[EQP6P ]
பாரிய சேதங்கள்
தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலையின் கட்டிடத்திற்கும் இயந்திரங்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் தயாரிக்கப்பட்டிருந்த பெருந்தொகை தேயிலையும் சேதமாகி உள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளை
மேற்கொள்வதாகவும் புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



