பூரு மூணாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் பூரு மூணாவை பார்வையிடுவதற்காக நுகேகொட நீதிமன்றத்தின் பிரதான நீதவான் தனுஜா ஜயசிங்க, பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று சென்றுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் மேல் மாகாண தென் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய பூரு மூணா எனப்படும் ரவிந்து சங்க டி சில்வா 90 நாட்களுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க அனுமதி
பூரு மூணாவை ஜூன் 20ஆம் திகதி வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து, நீதவான் இவ்வாறு நேரில் சென்று அவதானித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தடுப்புக் காவல் உத்தரவு தொடர்பாக அவிசாவளை நீதிமன்றத்திலும் தகவல் அளிக்கப்பட்டதாக மேலும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் பூரு மூணா தற்போது நுகேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தின் விசேட அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி ஏந்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
