பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மீட்பு
பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான 'பூரு மூணா' என அழைக்கப்படும் ரவிந்து வர்ண ரங்கன மறைத்து வைத்திருந்த ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹங்வெல்ல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 662 கிராம் அளவுடைய C4 என்ற வெடிபொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரவிந்து வர்ண ரங்கனவை தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தியபோது, குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெடிபொருள் மீட்பு
இதற்கு முன்னர் குறித்த சந்தேகநபரால் கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன வெடிபொருள் மீட்கப்பட்ட இடத்திற்கு அண்மித்த பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரவிந்து வர்ண ரங்கனவிடம் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam