லண்டனில் கோர விபத்து - ஒருவர் பலி
தெற்கு லண்டனில் பிரதான வீதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்தவரின் வயது உள்ளிட்ட விபரங்கள் வெளியாகவில்லை. விபத்தை தொடர்ந்து துணை மருத்துவர்களின் உதவி இருந்த போதிலும் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில்,
தற்காலிமாக மூடப்பட்ட வீதி
“இன்று (ஆகஸ்ட் 30) மாலை 6.01 மணிக்கு குரோய்டனில் உள்ள Purley சாலையில் இடம்பெற்ற விபத்து பற்றிய தகவல்களுக்கு அழைக்கப்பட்டோம். இரண்டு ஆம்புலன்ஸ் குழுக்கள், மருத்துவர், இரண்டுஅதிகாரிகள் மற்றும் ஒரு மருத்துவ குழு தலைவர் உட்பட பலர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும், துரதிர்ஷ்டவசமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், குறித்த வீதிப் பகுதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. மாற்று பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 19 மணி நேரம் முன்

நடிகர் பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டை நீங்கள் பார்த்து இருக்கீங்களா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகின் சக்திவாய்ந்த டாப் 10 பாஸ்போர்டுகள்: அமெரிக்கா, சீனா இல்லை.. முதலிடம் பிடித்த நாடு எது? News Lankasri
