சாவகச்சேரி நகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: டக்ளஸ் திறந்து வைப்பு
சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தாங்கி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றையதினம்(17.03.2025) இடம்பெற்றுள்ளது.
இதன்போது உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா,
“சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட சிவன் கோயில் தீர்த்த கிணற்றில் இருந்து நீர் பெற்றுக் கொள்ளப்பட்டு சுத்திகரிக்கப்படும் குடிநீரையும், அதற்கான கட்டமைப்புக்களையும் பாதுகாத்து பயன்படுத்த வேண்டியது சாவகச்சேரி மக்களின் கடப்பாடு.
நன்றி தெரிவித்த டக்ளஸ்
மேலும், இந்த விடயத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் தொடர்ச்சியாக எனக்கு நினைவுபடுத்திய விடயத்தை முன்னகர்த்திய தோழர்களான மெடிஸ்கோ, தர்சன் ஆகியோருக்கும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மற்றும் நீர்தாங்கியை அமைத்திருக்கும் குடும்பத்தினர் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மாராட்சி பிரதேச அமைப்பாளர் மெடிஸ்கோ, உதவி அமைப்பாளர் தர்ஷன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





