நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி கிடைக்காவிட்டால், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகளை தொடர்வது குறித்து இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சுமணசேகர,
அடுத்த வாரங்களுக்கான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு உடனடியாக 15.3 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.

நிலக்கரி ஏற்றுமதி
இந்த நிலையில் 2023 ஜனவரி 30 முதல் பெப்ரவரி 03 வரையிலான மூன்று நிலக்கரி ஏற்றுமதிக்கு கட்டணங்களை செலுத்த வேண்டும்.
ஒரு கப்பலுக்கு 1.35 பில்லியன் டொலர் என்ற அடிப்படையில் முதல் தவணையாக அதில் 30வீதத்தை செலுத்தியுள்ளோம். மற்ற இரண்டு தவணைகள் இன்னும் செலுத்தப்படவில்லை.

இதனை தவிர மூன்று கப்பல்களில் இரண்டுக்கு 30வீத ஆரம்பக் கொடுப்பனவுகளும், மூன்று கப்பல்களுக்கும் செலுத்த வேண்டிய மீதமுள்ள 70 வீத ரூபாவுடன் சேர்த்து, இன்று பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நிலக்கரி கொள்முதல் செய்ய 10.74 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.
எனவே மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தீர்ந்துபோகும் முன் இந்த
நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று சுமணசேகர வலியுறுத்தியுள்ளார்.
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan