ஆபாசமான புகைப்படங்களை வைத்திருந்த பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஆபாசமான புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான பெண்ணொருவருக்கு அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த யுவதிக்கு அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய 1, 500 ரூபா அரசாங்கக் கட்டணமாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பிரதான நீதவான், மீண்டும் அவ்வாறான தவறுகளைச் செய்ய வேண்டாம் என யுவதியைக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்த ஆபாச புகைப்படங்களை மீளமுடியாதவாறு நீக்கவும் சிம் கார்ட் மற்றும் மெமரிகளில் உள்ளவற்றை அழிக்கவும் அனுராதபுரம் பொலிஸ் சைபர் தடுப்பு பிரிவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 1 மணி நேரம் முன்

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
