பிரபல நடிகையின் தொலைபேசி இலக்கங்கள் குறித்தும் விசாரணை
இலங்கையின் பிரபல நடிகை பியுமி ஹன்சமாலியின் (Piumi Hansamali) தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமானம் எவ்வாறு ஈட்டப்பட்டது என்பது குறித்து குறிப்பிடாது பியுமி பாரியளவு சொத்துக்களை திரட்டியுள்ளதாக குற்றம் சுமத்தி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
தற்போதைய விசாரணைகள்
முதல் கட்டமாக பியுமியின் வங்கிக் கணக்குகள் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.
தற்பொழுது பியுமியின் தொலைபேசி இலக்கங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக சட்டவிரோத சொத்துக் குவிப்பு குறித்த பொலிஸ் விசாரணைப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பியுமியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட 50இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டதனை விடவும் அதிகளவு சொத்துக்கள் பியுமியிடம் இருப்பதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
