புல்மோட்டை கணிய மணல் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர் போராட்டம்
திருகோணமலை மாவட்ட புல்மோட்டை கணிய மணல் தொழிற்சாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 83 பேருக்கு கடந்த 9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களுடைய குடும்பங்கள் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு வருவதாகவும் பிள்ளைகளை கற்பிப்பதற்கு கூட வசதியின்றி இருப்பதாகவும் தமது கவலைகளை வெளிப்படுத்துகின்றனர்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
தேர்தலின் போது புதிய அரசாங்கத்திற்கு தங்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படும் என்ற நோக்கில் அயராது பாடுபட்டு வாக்குகளை அள்ளி வழங்கியிருந்த போதிலும் தற்போது தாங்கள் கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதாகவும் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.

எமது குடும்பங்கள் மற்றும் சிறார்களின் எதிர்கால நலன் கருதி எங்களுடைய சம்பளத்தை பெற்றுத் தருமாறு தாழ்மையாக கேட்டுக் கொள்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கணிய மணல் கூட்டுத் தாபனத்திற்கு வர்த்தக வாணிபத் துறை அமைச்சர் சுணில் ஹந்துன் நெத்தி கடந்த மாதமளவில் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடியதுடன் இது குறித்து எதிர்காலத்தில் முறையான சம்பளம் வழங்குவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri