புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை- புல்மோட்டை (Pulmoddai) இல்மனைட் தொழிற்சாலை ஊழியர்கள் இன்று (7) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 83 பேருக்கும் முழு சம்பளத்தையும் வழங்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் பணிக்கு அமர்த்தபட்ட இவர்களுக்கு, ஒரு வருடம் கடந்தும், இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம்
இவர்களில் 34 ஊழியர்களுக்கு இன்று வரை மூன்று மாத காலம் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஏனையவர்களுக்கு அதுவும் வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல தடவைகள் எடுத்துக் கூறியும், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் அவர்களால் முன்னெடுக்கப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் தங்களுடைய குடும்பங்கள் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு வருவதாகவும் பிள்ளைகளை கற்பிப்பதற்கு கூட வசதியின்றி இருப்பதாகவும் தமது கவலைகளை வெளிப்படுத்துகின்றனர்.
கோரிக்கை
தேர்தலின் போது புதிய அரசாங்கத்திற்கு தங்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படும் என்ற நோக்கில் அயராது பாடுபட்டு வாக்குகளை அள்ளி வழங்கியிருந்த போதிலும் தற்போது தாங்கள் கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதாகவும் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
எமது குடும்பங்கள் மற்றும் சிறார்களின் எதிர்கால நலன் கருதி, எங்களுடைய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 54 நிமிடங்கள் முன்

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவி சீரியல் புகழ் மான்யா ஆனந்த்... எந்த தொலைக்காட்சி தொடர்? Cineulagam
