14 ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுபடும் புல்மோட்டை ஊழியர்கள்
திருகோணமலை- புல்மோட்டை கணிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றும் 14 ஆவது நாளாக இன்றும் (27) சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கணிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என கோரி தொடர்ச்சியாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சுமார் 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் பெரிதும் பொருளாதார ரீதியாக தங்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
போராட்டம்
இது தொடர்பில் உரிய துறை சார் அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுத் தரக் கோரி சத்தியாக் கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
"பல மில்லியன் டொலர்களை உருவாக்கும் LMSLநிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்காமல் மறுக்கப்படுவது ஏன், ஜனாதிபதி அவர்களே இது உங்களின் கவனத்திற்கு" போன்ற சூலோகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுகம ஷானின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத ஆத்திரத்தில் ஜகத் விதானவுக்கு அச்சுறுத்தல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam