பூஜித் - ஹேமசிறிக்கு எதிரான வழக்கு விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உயிா்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடா்பில் முன்கூட்டியே தகவல்கள் கிடைத்தும் கூட அதனை தடுக்கத்தவறியமை தொடா்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளா் ஹேமசிறி பொ்ணான்டோ(Hemasiri Fernando) மற்றும் முன்னாள் காவல்துறை அதிபா் பூஜித் ஜெயசுந்தர(Pujith Jayasundara) ஆகியோருக்கு எதிராக நீதிவான் நீதிமன்றத்தி்ல் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த வழக்கு விசாரணைகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தநிலையிலேயே அவை இன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த விசாரணையின்போது இன்று நீதிமன்றத்துக்கு தகவல் வழங்கிய குற்றப்புலனாய்வுத்துறையினா், இது தொடா்பான மற்றும் ஒரு வழக்கு விசாரணை கொழும்பு மேல்நீதிமன்றத்தின் ட்ரயல் அட் பாா் அமா்வில் இடம்பெற்று வருவதாக அறிவித்தனா்.
எனவே நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் விசாரணையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று அவா் கோாினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிவான், குறித்த விசாரணைகைளை முடிவுக்கு கொண்டு வருமாறு
உத்தரவிட்டாா்.