முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் புதுவை பண்பாட்டுப் பெருவிழா
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை இலண்டன் கிளை என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள புதுவை பண்பாட்டுப் பெருவிழாவிற்கான போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்விழாவான் இறுதி நிகழ்வு, எதிர்வரும் 06.04.2024 அன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வில், வடமாகாண ஆளுநர் பி. எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் இந்திய துணைத்தூதூவர் சாய் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கலைஞர்களுக்கான பல்வேறு போட்டி
இந்நிலையில், இந்த புதுவை பண்பாட்டுப் பெருவிழாவினை முன்னிட்டு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட கலைஞர்களுக்கான பல்வேறு போட்டி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், போட்டி நிகழ்வுகளின் ஆரம்ப நாளான 30 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பொன்விழா மண்டபத்தில் மாலைக்கு வாதாடிய மைந்தன் கூத்துப் போட்டி இடம்பெற்றுள்ளது.
மேலும், நாட்டார் பாடல், கும்மி , தனி நடனம், பாடல் போட்டிகளும் இடம்பெற்ற அதேவேளை 31 ஆம் திகதி புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வளாகத்தில் பேச்சு போட்டி, சொற்சமர் சதுரங்க போட்டி உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த போட்டிகளில் வெற்றி மீட்டும் கலஞர்களின் கலை நிகழ்வுகள் புதுவை பண்பாட்டுப் பெருவிழாவில் அரங்கேற்றப்படுவதோடு வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி : சண்முகம் தவசீலன்