வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள்
புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்து புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு நேற்றையதினம்(19.12.2024) இடம்பெற்றுள்ளது.
ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், ஆளுநர், முல்லைத்தீவு மாவட்டச் செயலராக கடந்த காலத்தில் பணியாற்றியமை நினைவுகூர்ந்தனர்.
நேரில் சந்திப்பு
மேலும், புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்க கட்டடத்தின் எஞ்சிய வேலைகளை நிறைவுசெய்வதற்கு நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்ததுடன், பிரதேசத்தின் வேறு பல தேவைகள் தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளனர்.
வர்த்தக சங்கத்தினரின் கோரிக்கைகளை சாதகமாக அணுகிய ஆளுநர், விரைவில் புதுக்குடியிருப்புக்கு வந்து அங்குள்ளவர்களை நேரில் சந்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
