இலங்கை அரசாங்கத்திடம் கலந்துரையாட புதுச்சேரி சார்பில் குழு அமைக்கப்படும்: ஏம்பலம் ஆர். செல்வம்
இலங்கை அரசாங்கத்திடம் பேசவும், காரைக்காலில் இருந்து பல ஆண்டுகளாக கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்கவும் புதுச்சேரி சார்பில் குழு அமைக்கப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் ஆர். செல்வம் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் 43.4 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வின்போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், காரைக்காலில் இருந்து இலங்கை அரசங்கத்தால் கைப்பற்றப்பட்டு இணைக்கப்பட்ட இயந்திர படகுகள் இன்னும் அந்த நாட்டில் உள்ளன.

இந்திய அரசாங்கம்
படகுகள் இல்லாமல் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.சந்திரபிரியங்கா மற்றும் தமது தலைமையில் ஒரு குழுவை அமைக்கப்பட்டு, அந்த குழு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இதன்போது இந்திய அரசாங்கம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன்
காரைக்காலின் இயந்திர படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam