மின்சார விநியோகத்தில் மீண்டும் தடையா! வெளியாகவுள்ள தகவல்!
இலங்கையில் மின்சார விநியோகத்தில்,அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் இன்று மாலையில் புதிய அறிவிப்புக்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகி்றது.
மின்சாரசபை தொழிற்சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜெயலால் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று மாலை, இலங்கை மின்சாரசபையின் யோசனைகளை,பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மின்சாரசபையிடம் கையிருப்பில் உள்ள எரிபொருட்கள் மற்றும் நீர் மின்சார உற்பத்தியின் கொள்ளவவு உட்பட்ட விடயங்கள் ஆராயப்படவுள்ளன.
இந்தநிலையில் ஏற்கனவே இன்று 27ஆம் திகதி வரை எரிபொருட்களின் கையிருப்பு இருப்பதன் காரணமாக, மின்சார விநியோகத்தில் தடங்கல்கள் இருக்காது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
