எரிவாயு குறித்த ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளத் தயார்: பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு
இலங்கை தர நிர்ணய நிறுவகத்துடன் இணைந்து எரிவாயு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறையை ஒழுங்குபடுத்துவதற்கு தயார் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரட்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதுகாக்கக் கூடிய வகையிலான தர நிர்ணயங்களை அமுல்படுத்த தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனினும், எரிவாயு துறையை கட்டுப்படுத்துவதற்கான சட்ட அதிகாரம் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு கிடையாது .
எரிவாயுவின் அதிகபட்ச அழுத்தம், எரிவாயுக் கலவையின் விகிதாசாரம், சிலிண்டரில் காணப்படக்கூடிய ப்ரோபெய்னின் அளவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தர நிர்ணயங்களை அறிவிக்கப்பட்டுள்ளன.
எரிவாயு தொடர்பில் சில தர நிர்ணயக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் அவை சட்ட ரீதியானதாக அமுல்படுத்தப்படவில்லை.
எரிவாயு தொடர்பிலான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்வதற்கு பெற்றோலிய பொருட்கள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை விரைவில் திருத்தி அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri