மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா! வெளியான முக்கிய அறிவிப்பு
மின்சாரக் கட்டணத்தை திருத்துமாறு மின்சார சபை கோரவில்லை எனவும் தற்போது கட்டண திருத்தம் தேவையில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பல்வேறு முரண்பாடாக கருத்துக்களை முன்வைத்து வந்தன.
இது தொடர்பான விளக்கத்தை வழங்க இன்றைய ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
மின்கட்டணத் திருத்த பொறிமுறையொன்று அவசியம்
"காலநிலை மற்றும் வானிலையை அடிப்படையாகக் கொண்ட மின்கட்டணத் திருத்த பொறிமுறையொன்று அவசியம் என 2016 ஆம் ஆண்டு முதல் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு தெரிவித்துவருகிறது.
நாம் நீர்மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துவதால் திருத்தம் அதுசார்ந்ததாக இருக்க வேண்டும். அதன்படி, ஏப்ரல் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
2016 முதல் 2021 வரை எந்த கட்டண திருத்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை.
நட்டத்தில் இயங்கும் மின்சார சபை
மின்சார சபை நட்டத்தில் இருப்பதை அவதானித்தமையினால் கட்டணத்திருத்தம் தொடர்பான யோசனை கடந்த வருடம் முன்வைத்தேன். அதன்படி, கட்டணமும் அதிகரிக்கப்பட்டது.
தற்போதைய, அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஜனவரி மற்றும் ஜூன் மாதத்தில் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் காலநிலை மாற்றத்துடன் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் இந்த கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக கூறுபடுகிறது. கட்டணத்தை அதிகரிப்பதால் அதனை செய்யமுடியாது" என்றார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
