மின்சாரக் கட்டணங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு...!
நாட்டில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை குறைப்பின் நலன்களை மின்சார பயன்பாட்டாளர்களுக்கு வழங்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மின்சார சபையிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் நிலக்கரி விலை குறைவடைதல், எரிபொருள் விலை குறைவடைதல் மற்றும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதனால் மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தினால் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இந்தக் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் அதிகாரபூர்வ பதில்கள் எதனையும் இதுவரையில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam