அழகியல் பாடங்கள் தவிர்த்து வெளியிடப்பட்டுள்ள சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்
அழகியல் பாடங்கள் தவிர்த்து கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் 2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டியிருந்தது.
சங்கீதம் உள்ளிட்ட அழகிய பாடங்களுக்கான நடைமுறைப்பரீட்சைகள் நடாத்தப்படாத நிலையில் இந்தப் பாடங்களுக்கான பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இவ்வாறு பரீட்சை பெறுபேறுகள் முழுமையாக வெளியிடப்படவில்லை.
2020ம் ஆண்டில் 423746 பாடசாலை பரீட்சார்த்திகளும், 198606 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
கோவிட் நிலைமைகள் காரணமாக 2020ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை இந்த மார்ச் மாதம் நடைபெற்றது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
