சுவிற்சர்லாந்தில் பேர்ன் மாநில அரசின் பல்சமய வரைபடம் வெளியீடு (PHOTOS)

Switzerland
By Dias Nov 25, 2021 04:54 PM GMT
Report

சுவிஸ் - பேர்ன் மாநிலம் தமது மண்ணில் உள்ள அனைத்து வழிபாட்டு இடங்களையும், சமயங்களையும் இணையத்தில் எண்ணியல் (டிஜிட்டல்) வரைபடமாக வெளியிட்டுள்ளது.

பேர்ன் மாநில அரசு கடந்த ஆண்டு 2020ல் இத்திட்டத்தினை உருவாக்கிய போது இந்து சைவத்திருக்கோவில்களின் ஒன்றியம் சுவிற்சர்லாந்து மற்றும் சைவ நெறிக்கூடம் இணைந்து பணியாற்றி பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள கோவில்களை பட்டியலிட்டு அவர்களது செற்பாட்டுப் பணிகள் தொடர்பில் அறிக்கை உருவாக்கி அளித்திருந்தது.

இதன் நோக்கம் பேர்ன் மாநிலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சமய- மற்றும் வழிபாட்டு இடங்களை அனைவருக்கும் வெளிக்காட்டுவதும், இந்த அமைப்புக்களின் பணிகளை அனைவருக்கும் அறியச்செய்வதும் ஆகும்.

பல்சமய அமைப்புக்களும் சிறந்த தகவல் பரிமாற்றங்களுடன் இணங்கி வாழத்தொடர்புகள் பேண இது வழி செய்வதாக இதன் இயக்குனர் தாவித் லொயிட்வில்லெர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் நாட்டில் பல்வேறுபட்ட இனங்களும், சமயங்களும் தமது உலகப்பார்வையினை எவ்வாறு கொண்டுள்ளார்கள் என்பதையும், இவ்வரைபடம் காட்டுகின்றது என்றும் தாவித் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் திருக்கோவில்கள் 'மன்றம்' எனும் பொதுச்சட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றன. சுவிற்சர்லாந்தின் 1848 அமைக்கப்பெற்ற அரசியல் யாப்பின் பயன் சமய அமைப்புக்களுக்கு அரசு நிதி வழங்காது. தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களும் தமது எதிர்கால செயற்பாடு, இயங்குமுறை தொடர்பில் மாநில நடுவன் அரசுகளுடன் பேசி வருகின்றார்கள்.

இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளுக்குள் எமது சைவ சமயத்திற்கு உரிய சுவிற்சர்லாந்தின் அரச ஒப்புதலை பெற்று (அங்கீகாரம்) சுவிஸ் தேவாலயங்களுக்கு ஒப்பான செயல்முறைகளுக்கு சைவத்தமிழ்க் கோவில்களின் செயற்பாடுகளும் வளரும் என்பதற்கு பேர்ன் மாநில ஆட்சி மன்றத்திற்குள் 23. 11. 2021 செவ்வாய்க்கிழமை மாலை 18.30 மணிமுதல் பேர்ன் மாநில அமைச்சர் எவெலின் அலேமான் முன்னிலையில் அனைத்து சமயங்களின் இருப்பிடங்களை உள்ளடக்கிய இணைய வரைபடம் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது திருமதி. அலேமான் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கால மாற்றத்திற்கும்,மக்களின் நம்பிக்கைக்கும் ஏற்ற முறையில் மாநில மற்றும் நடுவனரசின் சமயங்கள் தொடர்பான அணுகுமுறை மாறவேண்டும் எனவும், எதிர்காலத்தில் சுவிஸ் பல்சமயப் பல் சமூக நாடாக சிறந்து விளங்க அனைத்து சமய அமைப்புக்களின் பங்களிப்பும் இன்றியமையாதது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்விற்கு பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து சைவ - இந்துத் திருக்கோவில்களுக்கும் உரிய அழைப்பு பேர்ன் மாநில அரசின் பெயரால் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் சைவநெறிக்கூடம் அருள் ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில், பேர்ண் சிறி கல்யாண சுப்பிரமணியர் ஆலயம், ஸ்ரீ விநாயகர் ஆலயம் லங்நவ், அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் தூண், சிறி சீரடிசாயிபாபா தேவஸ்தானம் தூண் ஆகிய கோவில்களின் உறுப்பினர்கள் நேரில் வருகை தந்துள்ளனர்.

இணைப்பக்கத் திறப்பு விழாவினைத் தொர்ந்து நடடைபெற்ற பேராளர் உரையிலும், பண்பாட்டுக் கலந்துரையாடல் நிகழ்விலும் தமிழ் சைவக்கோவில் உறுப்பினர்கள் பிற பல்சமய அமைப்புக்களின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன்,நிறைவில் பேர்ன் மாநில அரசின் சார்பில் இரவு உணவு வழங்கி விருந்தோம்பலுடன் நிகழ்வு நிறைவு பெற்றுள்ளது.

ஒவ்வொரு தமிழ்க்கோவில்களும், கோவில்கள் அமைந்திருக்கும் ஊராட்சி மன்றத்தில், மாநில அரசிடத்தில், சுவிற்சர்லாந்து நடுவன் அரசுடன் நல்லிணக்க உறவினைப் பேணுவதுடன், கூட்டுப்பணிகளில் பங்கெடுத்து சைவத் தமிழ் மக்களின் வழிபாட்டு மற்றும் ஆற்றுப்படுத்தல் தேவைகளை நிறைவு செய்ய வழிசெய்யும். இவ்வாறு அமையப்பெறும் இந்நிகழ்வுகள் கோவில்கள் பணிக்கு மதிப்பளிப்பாக அமைவதோடு சைவத்தமிழ் மக்களுக்கு உரிய தொண்டாற்ற ஊக்குவிப்பதுடன், கோவில்களுக்கும் ஏனைய சுவிஸ் சமூகப்பொது அமைப்புக்களுக்கும் வழங்கப்படும் உரிமைகளை பெற வழிசெய்யும் என்ற நம்பிக்கையுடன் நிறைவுற்றுள்ளது.


 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US