யாழில் மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கை அறிக்கை வெளியீடு
மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கை அறிக்கை வெளியீடு யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, இன்று (04.08.2024) மாலை யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல், மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர்களான ராஜ்குமார் ரஜீவ்காந், துமிந்த நாகமுக, சுவஸ்திகா அருலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

கொள்கை அறிக்கை புத்தகம்
இதன்போது, கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவினால் கொள்கை அறிக்கை புத்தகமும் வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



100 ஆண்டுக்கு பிறகு உருவாகும் திரிகிரக யோகம்: 3 ராசிக்காரங்களுக்கு பணம் கையில் குவியப்போகுது Manithan
சுவிஸ் நாட்டவரின் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த கோடிக்கணக்கில் மதிப்புடைய பொருட்கள்: பின்னணி News Lankasri