பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட முன்கூட்டிய ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இடைக்கால வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதே எஞ்சியுள்ளது.
இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பான அனைத்து தேவையான தயாரிப்புகளும் தேசிய வரவு செலவுத் திணைக்களத்தால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நிதியமைச்சர் என்ற முறையில் ஜூன் 7 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய விக்ரமசிங்க, இடைக்கால வரவுசெலவுத்திட்டம் மூலதனச் செலவினங்களைக் குறைக்கும், அத்துடன் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் பொருளாதாரத்திற்கான "அடித்தளமாக" செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கவனம் செலுத்த வேண்டிய அவசரத்தேவை
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு புத்துயிர் அளிப்பதிலும் கவனம் செலுத்துவோம். ஏற்றுமதி பொருளாதாரம், சுற்றுலா, கட்டுமானம் போன்ற பல துறைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசரத்தேவை உள்ளது.
எவ்வாறாயினும், இந்த கூற்றுகளுக்கு மாறாக, வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒதுக்கீட்டு (திருத்தம்) சட்டமூலத்தின்படி, மதிப்பிடப்பட்ட அரசாங்க செலவினம் 2.8 டிரில்லியனில் இருந்து 3.3 டிரில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படுள்ளது.மூலதனச் செலவு 955.6 பில்லியனில் இருந்து 1,088.6 பில்லியனாக ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால வரவுசெலவு திட்டம்
இதேவேளை, 2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்டம் ஆறு முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
உணவு பாதுகாப்பு திட்டம்: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருடாந்த செலவினம் $350 மில்லியனில் இருந்து $550 மில்லியனாக அதிகரிப்பு, இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் கடன்களை 100% தள்ளுபடி செய்தல். அவர்களின் குடியிருப்பாளர்களுக்கு அரசு நிலத்தின் இலவச உரிமையை வழங்கும் திட்டம்.
நகர்ப்புற குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்போருக்கு சலுகை அடிப்படையில்
வழங்கும் திட்டம் மற்றும் சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட 1,888
குடியிருப்புகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் ஆகியனவே அவையாகும்.