அரச ஊழியர்களுக்கான நீண்ட கால விடுமுறை! வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு
யாருக்கெல்லாம் பொருந்தாது?
அரச ஊழியர்களுக்கான 5 ஆண்டுகள் சம்பளமற்ற விடுமுறை யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளதுடன், இன்னும் பல விடயங்களையும் தெரியப்படுத்தியுள்ளார்.
அதன்படி, அரச ஊழியர்களுக்கான 5 ஆண்டுகள் சம்பளமற்ற விடுமுறை வழங்கும் அரசாங்கத்தின் சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தொழிநுட்ப சேவைகள் போன்ற பிரிவுகளுக்கு பொருந்தாது.
இந்த திட்டத்திற்கான நோக்கம்
இந்த நீண்ட கால விடுமுறைக்கான சுற்றறிக்கையை அரசாங்கம் பல்வேறு நிறுவனங்களின் மேலதிகமான ஊழியர்களை விடுவிப்பதற்காகவே அறிமுகப்படுத்தவுள்ளது.
நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பிரிவு ஊழியர்களுக்கு இது பொருந்தாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது இந்த சுற்றறிக்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தாம் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.