அரச ஊழியர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி! அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து புதிய அறிவிப்பு

Dr Ramesh Pathirana Government Employee Sri Lanka Sri Lanka Cabinet
By Mayuri Sep 13, 2022 05:44 AM GMT
Report

அரச சேவைக்கான அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்புகளை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவித்துள்ளார்.

வழங்கப்பட்டுள்ள அனுமதி

எனினும் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் சேவைகளை பேண வேண்டிய தேவைக்காக, வேறு துறைகளில் அதிகமாக இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.

அரச ஊழியர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி! அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து புதிய அறிவிப்பு | Government Workers Sri Lanka Public Worker Job

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தலைமையில் குழு

மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, அரச சேவையை மேலும் திறமையாகவும், உயர் மட்டத்திலும் பராமரிக்கும் நோக்கில், பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தும் பணியில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.

அரச ஊழியர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி! அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து புதிய அறிவிப்பு | Government Workers Sri Lanka Public Worker Job

அத்துடன், கடந்த காலங்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட 60,000 அரச ஊழியர்களுக்கு தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சரவை அங்கீகாரம்

தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமையினால் சேவை யாப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறை ஏற்பாடுகளின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நேரிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளைக் கையாண்டும், அத்துடன் கடந்தகால அரசாங்கங்களால் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்தின் பிரகாரமும் அடிக்கடி பட்டதாரிகள் மற்றும் ஏனைய ஊழியர்கள் நேரடியாக அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டமையால், ஒட்டுமொத்தமாக அரச சேவை மிகையாக காணப்பட்டாலும், சில சேவைப் பிரிவுகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக பதிவாகியுள்ளது.

அரச ஊழியர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி! அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து புதிய அறிவிப்பு | Government Workers Sri Lanka Public Worker Job

அதேபோல் ஆட்சேர்ப்பின் போது பல்வேறு முறைகளைக் கடைப்பிடிக்கின்றமையால் ஏற்பட்டுள்ள விளைவுகளின் காரணமாக அரச சேவையில் மேலெழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக பொருத்தமான படிமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதற்கமைய மேற்குறிப்பிட்ட விடயங்களை மீளாய்வு செய்து அரச சேவையை மிகவும் வினைத்திறனாகவும், பயன்வாய்ந்ததாகவும் மேற்கொண்டு செல்வதற்காக மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புகள் தொடர்பான முன்னுரிமைகளை அடையாளங்கண்டு அவற்றுக்கான கால அட்டவணையை அறிமுகப்படுத்தவும், தற்போது அரச சேவையில் மேலெழுந்துள்ள பிரச்சினைக்குப் பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் பிரதமரின் செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US