தேவை ஏற்பட்டால் மீண்டும் நாட்டை முடக்க நேரிடும்: பொது மக்களுக்கு எச்சரிக்கை
தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டை முடக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்க விடுத்துள்ளார். எனினும் தற்போதைக்கு அவ்வாறான ஓர் தேவை ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் பரவுகை நிலைமை மோசமடையாதிருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கோவிட் மரணங்களில் தளம்பல் நிலை காணப்படுகின்றது எனவும், அண்மைய நாட்களாக இந்த மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஓமிகோர்ன் திரிபினால் இலங்கைக்கு எவ்வாறான தாக்கம் ஏற்படும் என்பது குறித்து எதிர்வு கூறல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தென் ஆபிரிக்காவுடன் நேரடியான விமான போக்குவரத்து சேவை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan