நிலக்கரி தட்டுப்பாட்டு நட்டத்தை மக்கள் மீது சுமத்தவே முடியாது! பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு திட்டவட்டமான அறிவிப்பு
நிலக்கரி பற்றாக்குறையினால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது பாவனையாளர்கள் மீது சுமத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள விளக்கத்தில்,
மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்காக செலவிடப்படும் "நியாயமான" மற்றும் அவசியமான செலவுகள் மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளின் போது கவனத்தில் கொள்ளப்படும்.
கட்டண உயர்வுக்குக் காரணி
நிர்வாக குறைபாடுகளாலோ அல்லது திட்டமிடல் மாற்றங்களாலோ ஏற்படும் தேவையற்ற செலவுகளைக் கட்டண உயர்வுக்குக் காரணியாகக் காட்ட முடியாது.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானங்களின் போதும், நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது ஏனைய நியாயமற்ற செலவீனங்களுக்கு ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணைக்குழு தீர்மானம்
எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள எந்தவொரு மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளிலும், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக ஏற்படும் மேலதிக நிதிச் சுமைகளையோ அல்லது நியாயப்படுத்த முடியாத பிற செலவுகளையோ சேர்க்கக் கூடாது என்று ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின்சார உற்பத்தித் துறையில் நிலவும் முறைகேடுகள் அல்லது வள முகாமைத்துவப் பிரச்சினைகளால் ஏற்படும் நட்டத்தைப் பாவனையாளர்கள் தலையில் சுமத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam