பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவர் மீது அச்சுறுத்தல்: சந்தேகநபர்கள் விளக்கமறியலில்
மின் பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய கூட்டிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று (24) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகிய போதே இந்த உத்தரவு பிறப்பி்க்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் அச்சுறுத்தல்
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் நேற்று இரவு வத்தளை மற்றும் மெல்லவகெதர பிரதேசத்தில் வைத்து விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜனவரி 20ஆம் திகதி தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன், அவர்களின் கடமைகளைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் காணொளிக் காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதற்கமைய குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும், கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
