மீண்டும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்! - அமைச்சர் வெளியிட்ட தகவல்
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், சில நிபந்தனைகளின் கீழ் பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
இதன்படி, பயணிகளை எவ்வாறு பாதுகாப்பாகவும், சுகாதார நடைமுறைகளோடு அழைத்து செல்வது என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயணிகள் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய அழைத்து செல்லப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் மாகாணங்களுக்கு இடையேயான சேவையில் தனியார் பேருந்துகளும் ஈடுபட முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், 200,000 ரூபாவிற்கு அதிகமான மானியம் வழங்க தனியார் பேருந்து சங்கங்களுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri