மட்டக்களப்பு -கொழும்பு போக்குவரத்துச்சேவைக்கான அனுமதி!போக்குவரத்து அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
மட்டக்களப்பு -கொழும்புக்கான பொதுபோக்குவரத்துச்சேவையொன்றை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு மாநகரசபையினால் போக்குவரத்து அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்தியிடம் விடுக்கப்பட்ட வழிப்போக்குவரத்திற்கான அனுமதியை அமைச்சர் எழுத்துமூலம் வழங்கியதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் நேற்றைதினம்(8.1.2026) மாநகரசபையில் நன்றியைத் தெரிவித்தார்.
நன்றி தெரிவிப்பு
மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருமானம் ஈடுட்டும் வகையிலும் மக்களின் நன்மை கருதியும் மட்டக்களப்பு-கொழுப்புக்கான போக்குவரத்துச்சேவையொன்றை நடாத்துவதற்கு வழிஅனுமதியை கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்தியிடம் வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டது.

அந்தவேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக இங்கு மாநகர முதல்வரினால் அறிவிக்கப்பட்டு அமைச்சருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.