திருகோணமலையில் எரிவாயு வழங்குமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்(Photos)
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் வழங்கப்படாமையினால் பிரதான வீதியை மறித்து, எரிவாயு வழங்குமாறு கோரி கொட்டும் மழையிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த போராட்டமானது இன்று (09) திருகோணமலை தபால் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுவருகின்றது.
இன்று காலை 6 மணி முதல் எரிவாயு வழங்கப்படும் என கடை உரிமையாளர் கூறியதை
அடுத்து மக்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.
இதனையடுத்து இன்று மாலை வரை எரிவாயு கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்து பிரதான வீதியினை எரிவாயு கொள்கலன்களுடன் இடைமறித்து “எரிவாயுவை வழங்கு ,நாட்டை விட்டுப் போ, மற்றும் திருடிய பணத்தைகொடு” போன்ற வாசங்களை பிரயோகித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கண்டி கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


