தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
தலவாக்கலை ராணிவத்தை வீதியில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகள் உரிய தூரம் வரை சேவையில் ஈடுபடுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று(23) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் போராட்டகாரர்கள் ராணிவத்தை பகுதியிலிருந்து சுமார் 3 கிலோ மீற்றருக்கும் தூரம் எதிர்ப்பு ஊர்வலமாக சென்று கோசங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை காட்சிபடுத்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
தலவாக்கலையிலிருந்து ராணிவத்தை தோட்டத்திற்கு கடந்த காலங்களில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் ராணிவத்தை வரை சென்றுளள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் வீதிக்கு மண் போடப்பட்டமையினால் பேருந்துகள் செல்வது கடினமானதாக அமைந்ததாகவும் அந்த கால்பகுதியிலிருந்து பம்பரகலை வரை மாத்திரம்பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளது.

இப்போது வீதி புனரமைக்கப்பட்ட நிலையில் இந்த வீதியூடான போக்குவரத்து பம்பரகலை தொழிற்சாலை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் சின்ன ராணிவத்தை, பெரிய ராணிவத்தை, மெல்டன் ஆகிய தோட்டங்களில் உள்ள மக்கள் தமது அன்றாட தேவையினை நிறைவேற்றிக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பம்பரகலை தொழிற்சாலைக்கு அருகாமையில் நிறுத்தப்படும் பேருந்தினை ராணிவத்தை வரை சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
300 இற்கும் மேற்பட்டவர்கள்
குறித்த போராட்டம் காலை 10 மணி தொடக்கம் 12 வரை இடம்பெற்றதுடன் லிந்துலை பொலிஸார் தலையீடு செய்து பேருந்தினை வழமையான இடத்திற்கு செல்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததனையடுத்து போராட்ட காரர்கள் களைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் ராணிவத்த பகுதியை சேர்ந்து சுமார் 300 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் இது குறித்த கருத்து தெரிவிக்கையில் குறித்த வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் ராணிவத்தை வரை டிக்கட்டை கொடுத்து விட்டு மூன்று கிலோமீற்றருக்கு முன்பதாக நிறுத்தப்படுவதாகவும் இதனை கேட்டால் வீதி உடைந்துள்ளது போக முடியாது என்று தெரிவிப்பதாகவும் இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள்,மற்றும் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவர்களுக்கு அறவிடும் பணத்திற்கு ஏற்ற தூரத்தினை வர முடியாவிட்டால் (வீதி அனுமதி பத்திரத்தினை இரத்துச் செய்ய வேண்டும்) ரூட் போமிட்டினை கென்சல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இந்த பேருந்து நிறுத்தும் இடத்திலிருந்து சுமார் மூன்று நான்கு கிலோமீற்றர் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு சுமார் ஐந்து பிரிவுகளை சேர்ந்து பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் நோயாளர்கள் என பலரும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
தோட்டத்தில் வேலை செய்தால் மாத்திரம் தான் சம்பளம் வழங்கப்படுவதாகவும் அந்த சம்பளத்தில் கூலி வாகனங்களை எடுத்து செல்லும் நிலையில் இல்லையெனவும் எனவே இது உரியவர்கள் கவனமெடுத்து ராணிவத்த பகுதிக்கே பொது போக்குவரத்தினை ஈடுபடுத்தப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 23 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri