அதிரடி மாற்றம் காணும் தங்கத்தின் விலை: எதிர்பாராத அளவு வீழ்ச்சி - நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி
சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4371 டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச சந்தையில் ஐயாயிரம் டொலர்களை தாண்டியிருந்த தங்கத்தின் விலையானது இன்று (23.03.2026) பாரிய சரிவை கண்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம் 8000 ரூபாவால் குறைந்துள்ளது.
இலங்கையில் விலை நிலவரம்
அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும் காணப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில் இவ்வாறு தங்கத்தின் விலையானது பாரிய சரிவை கண்டுள்ள நிலையில் இது மேலும் வீழ்ச்சி பாதையை நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 15 மணி நேரம் முன்
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri