யாழில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம்: போக்குவரத்தும் தடைப்பட்டது (Photos)

Sri Lanka Police Jaffna Sri Lankan Peoples SL Protest
By Kanamirtha May 24, 2022 01:45 PM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் யாழ். நகரில் சிறிது நேரம் பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. 

எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என நம்பி யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இன்று காலை முதல் காத்திருந்த பொதுமக்கள், நீண்ட நேரமாகியும் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படாததால் விரக்தியடைந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் சிறிது நேரம் காங்கேசன்துறை வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டதுடன், குழப்பமான நிலை உருவானது. இதனையடுத்து அங்கு வருகை தந்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் வீதியை மறித்துப் போராடிய பொதுமக்களை சமரசப்படுத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

யாழில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம்: போக்குவரத்தும்  தடைப்பட்டது (Photos) | Public Protest By Blocking The Road In Jaffna

இன்று காலை முதல் யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலை முன்பாக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு வந்திருந்த பொலிஸார் இங்கு விநியோகம் இடம்பெறாது எனவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குச் செல்லுமாறும் தெரிவித்தனர்.

யாழில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம்: போக்குவரத்தும்  தடைப்பட்டது (Photos) | Public Protest By Blocking The Road In Jaffna

இதனையடுத்து யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

அங்கும் எரிவாயு சிலிண்டர் கிடைக்காத நிலையில், விரக்தியடைந்த பொதுமக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம்: போக்குவரத்தும்  தடைப்பட்டது (Photos) | Public Protest By Blocking The Road In Jaffna

அதன் பின்னராக மீண்டும் கொட்டடியில் அமைந்துள்ள எரிபொருள் களஞ்சியசாலை முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் களஞ்சியசாலையில் சேமித்து வைத்துள்ள எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்குமாறு அங்கு இருந்த பொலிஸாருடன் முரண்பட்டனர்.

நீண்ட நேரத்தின் பின்னர் அங்கு மேலதிகமாக பொதுமக்கள் ஒன்று கூடாதவகையில் தடுக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு கூடியவர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது.

யாழில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம்: போக்குவரத்தும்  தடைப்பட்டது (Photos) | Public Protest By Blocking The Road In Jaffna

இதனைத்தொடர்ந்து யாழ். - அச்சுவேலி எரிபொருள் நிலையத்திலும் பெட்ரோலுக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

யாழில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம்: போக்குவரத்தும்  தடைப்பட்டது (Photos) | Public Protest By Blocking The Road In Jaffna

நேற்றிரவு பெட்ரோலின் விலையை 420 ஆக அதிகரித்துள்ள போதிலும் பொதுமக்கள் பெற்றோல் கொள்வனவில் முண்டியடிப்பதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம்: போக்குவரத்தும்  தடைப்பட்டது (Photos) | Public Protest By Blocking The Road In Jaffna

யாழில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம்: போக்குவரத்தும்  தடைப்பட்டது (Photos) | Public Protest By Blocking The Road In Jaffna

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US