பாதுகாப்பு சட்டமூலம் குறித்து பொது மக்களின் ஆலோசனை பெற நடவடிக்கை
உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து பொது மக்களின் ஆலோசனைகளை பெறுவதற்கு சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
உத்தேச சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்போர் 'OSB YES' எனவும் , எதிர்ப்பு தெரிவிப்போர் எனில் 'OSB NO' எனவும் பதிவிட்டு 076-7 001 001 எனும் இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலம் தங்கள் கருத்தை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது நேரடி ஜனநாயக முயற்சியின் ஒரு பகுதி எனவும், நாட்டு மக்கள் அரசாங்கத்தின் கொள்கைகளில் நேரடியாக வாக்களிப்பதற்கு அனுமதிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

கட்டுப்படுத்தப்படும் தொழில்நுட்ப துறை
உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலமானது, எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், ஊழலுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கும் ஊடகவியலாளர்களை ஒடுக்கவும், தகவல் தொழில்நுட்பத் துறையைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படலாம் என சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள் ஏற்கனவே இலங்கையில் உள்ள நிலையில், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் தேவையில்லை சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri