மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்: தற்போதைய அரசாங்கம் குறித்து மக்கள் கருத்து (Video)
கடந்த மூன்று மாதங்களாகக் கஷ்டத்தில் இருந்த நாம் இந்த பண்டிகை காலத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கொழும்பு நகர் வியாபாரிகள் மற்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் (11.04.2023) எமது ஊடகத்திற்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் , அரசாங்கத்தினால் விலைவாசிகள் குறைத்துள்ளனர். ஆனால், சில வர்த்தக நிலையங்களில் இன்னும் குறைக்கவில்லை.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை ஒரே நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வர முடியாது. எமது வாழ்வில் நாம் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து விட்டோம். எதிர்கால சந்ததியினரின் வாழ்வதற்குச் சரியான பாதையை மேற்கொண்டால் அதுவே எமக்கு போதும்.
எனவே, ஜனாதிபதி ரணிலுடன் ஏனைய கட்சிகளும் இணைந்து ஜதி, மத, பேதமின்றி வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.