பொதுமக்களுக்கு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் விடுக்கும் அறிவித்தல்
திருகோணமலை மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளதால் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இவ்வறிவித்தலை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட கோவிட் பரவல் அசாதாரண சூழ்நிலை காரணமாகப் பின்வரும் விடயங்களில்
அதிக கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1. சமய அனுஷ்டானங்களின் போது கலாச்சார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட நடைமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடித்தல் வேண்டும்.
2. மே 31 அல்லது மறு அறிவித்தல் வரை தனியார் வகுப்புகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதை முற்று முழுதாக தவிர்த்தல் வேண்டும்.
3. இப்தார் நிகழ்வுகள், பொது நிகழ்வுகள் , களியாட்டங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை முற்று முழுதாக தவிர்த்தல் வேண்டும்.
4. வீதியோரக் கடைகள் மற்றும் பண்டிகை கால விசேட கடைகளை சனநெரிசலற்ற இடத்தில் அமைத்தல் அல்லது அவற்றிலிருந்து விலகிக் கொள்ளல் வேண்டும்.
5. தேவையற்றதும் அனாவசியமானதுமான வெளி பயணங்களை முற்று முழுதாக தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.
6. வர்த்தக நிலையங்கள் விசேடமாக பண்டிகைக்காகக் கடைகள் மற்றும் வீடுகளில் வர்த்தகம் செய்வோர் மற்றும் நுகர்வோர் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் இல்லாவிடில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் நீதிமன்ற அனுமதியுடன் பூட்டப்படும்.
7. வாராந்த சந்தைகள் மற்றும் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நுகர்வோர் என அனைவரும் சுகாதார நடைமுறைகளைத் தொடர்ச்சியாகப் பேண வேண்டும்.
8. ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிகளை ஏற்றுதல்
வேண்டும் எனவும் இவ்வறிவித்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan