கிட்ணன் செல்வராஜ் எம்.பி தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வட்டார சபை அமைக்கும் மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
நம்பிக்கையில்லா பிரேரணை
இன்று விசேஷமாக எதிர்க்கட்சிகள் ஆடிப்போயிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் தழம்பல் நிலையில் இருக்கின்றன.
எதிர்க்கட்சிகள் ஒன்று சேர முடியாத நிலைமையிலும், ஒன்று சேரும் நிலைமையிலும் இருக்கின்றன. இதற்கு இவர்கள் காலத்திற்கு காலம் ஒவ்வொரு தலைப்புகளை தங்களுடைய கையிலே எடுக்கின்றனர்.

எடுக்கும் எந்தவொரு தலைப்பும் எதிர்க்கட்சிக்கு பிரயோசனமாக போகப்போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியும்.
இதில் நாங்கள் விசேஷமாக அண்மை நாட்களில் நீதி அமைச்சருக்கு எதிராக மகாணசபை சிறைச்சாலை தொடர்பான பிரச்சனைகளை முன்வைத்து, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தோம். அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சிகள் சுக்குநூறாகின.
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் தெரிவு
60-க்கும் குறையாத எதிர்க்கட்சி ஆசனங்களைக் கொண்ட எதிர்க்கட்சி, 36-க்கு வரையறுத்தது. அதுமட்டுமல்ல எதிர்க்கட்சியிலே அமர்ந்திருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் சஜித் அணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

அடுத்த கட்டமாக இவர்கள் தூக்கியிருப்பது உயர்நீதிமன்ற நீதியரசர்களின் தெரிவு சம்பந்தமாகவும், அடுத்து அவர்களுடைய பதவிகாலம் நீடிப்பு சம்பந்தமான கருத்தியலையுமாகும்.
ஆனால், இலங்கையின் 1978-ஆம் ஆண்டு யாப்பின் பிரகாரம் ஒருசில நீதிமன்றங்களுக்கு மட்டுமே, அந்த 78-ஆம் ஆண்டு யாப்பின் பிரகாரம் நீதியரசர்களை தேர்வு செய்யக்கூடிய கட்டளைகள் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.