யாழில் பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீளத் திறப்பு
கடந்த மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அதிகரித்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்தது.
நிலையில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழி காட்டுதலுக்கு இணங்க இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை, மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் ஏனைய பொதுச் சந்தைகள் இன்றைய தினம் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளன.
சந்தைகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வியாபார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சந்தைகளில் பொலிசார், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam