கோப் குழுவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பொது நிறுவனங்கள்
நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்களுக்கான குழுவின் (கோப்) முன்னால் பிரசன்னமாகுமாறு பல நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது அழைக்கப்பட்ட நிறுவனங்களும் அடங்கும்.
அதன்படி பெப்ரவரி 23ஆம் திகதி புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளதுடன், பெப்ரவரி 24ஆம் திகதி இலங்கை தர நிர்ணய நிறுவனம் அழைக்கப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி குழுவின் முன் பிரசன்னமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடல் சுற்றுச்சுழல் பாதுகாப்பு ஆணையம் எதிர்வரும் மார்ச் 11 ஆம் திகதி பிரசன்னமாகிறது.
அரச அடைமானம் மற்றும் முதலீட்டு வங்கி மார்ச் 23ஆம் திகதியும், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மார்ச் 24ஆம் திகதியும், மக்கள் வங்கி 25ஆம் திகதியும் கோப் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற ஒன்பதாவது நாடாளுமன்றத்தின்
இரண்டாவது அமர்விற்காக நடைபெற்ற முதலாவது கோப் குழுக் கூட்டத்தில் புதிய தலைவராக
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.



