மட்டு நகரில் வீதியோர வியாபார நிலையங்களை திடீர் முற்றுகையிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் (Photos)
மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபார நிலையங்களை மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் முற்றுகையிட்டுள்ளனர்.
குறித்த வியாபார நிலையங்களை இன்று (04.01.2024) மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் முற்றுகையிட்டுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரிசோதனை நடவடிக்கை
மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களான த.மிதுன்ராஜ், சோதிராஜா அமிர்தன், சோமசுந்தரம் யசோதன் ஆகியோர் கொண்ட குழுவினரே சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் கல்லடி பொது சந்தை சதுக்கம், கல்லடி, திருகோணமலைவீதி, அரசடி, ஊறணி போன்ற பகுதிகளில் வீதியோரத்தில் மரக்கறிவகைகள், பழவகைகள், மீன்கள், கருவாடு போன்ற பொருட்களை வீதியோர வியாபாரம் செய்துவரும் வியாபார நிலையங்களை முற்றுகையிட்டு பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது 7 வியாபார நிலையங்களில் மனித பாவனைக்கு உதவாத பழங்களும், இனிப்புபண்டங்களும் உள்ளடங்களாக பெருமளவிலான பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் அவற்றை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள்: ஜனாதிபதி நடவடிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






