பொதுமக்களுக்கு இலங்கை வங்கிகள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
வங்கிக் கணக்குகள் தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான இணைப்புக்களை அழுத்த வேண்டாம் என்று வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
மோசடியாளர்கள், வங்கிப் பயனர்களை தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருட வடிவமைக்கப்பட்ட போலி வங்கி வலைத்தளங்களுக்கு வழிநடத்துகிறார்கள்.
மக்களுக்கு எச்சரிக்கை
மோசடியான மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் மோசடி இணைப்புகளைப் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி போலி வலைத்தளங்களுக்கு அவர்களை உள்ளீர்க்கின்றார்கள்.
இந்த தளங்கள் பெரும்பாலும் அதிகாரப்பூர்வ வங்கிகளின் இணையதளங்களை பிரதிபலிக்கும் வகையில் மாற்றப்பட்ட எழுத்துக்கள் அல்லது அதனை ஒத்த பெயர்களை பயன்படுத்துகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ வலைத்தள முகவரிகளை நேரடியாக உலாவிகளில் தட்டச்சு செய்யவும், உள்நுழைவு விபரங்களை உள்ளிடுவதற்கு முன்பு URLகளை கவனமாகச் சரிபார்க்குமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயல்பாடு தொடர்பிலும் உடனடியாக முறைப்பாடளிக்குமாறு வங்கிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளன.



