அறுகம்பே சுற்றுலா பருவகாலம் ஆரம்பம்: உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனை
பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேசங்களில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் நேற்று முன் தினம் (06) இரவு அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உவைஸ் பாறுக் தலைமையில், இந்த விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொத்துவில் மற்றும் அறுகம்பே பகுதிகளில் உள்ள 24 இரவு நேர உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் சுகாதார நடைமுறைகளை மிகவும் மோசமான முறையில் மீறிய 9 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள்
மேலும் உணவக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு நடைமுறைகள், சமையலறை பராமரிப்பு மற்றும் சுத்தமான சூழலை உறுதிப்படுத்துவது தொடர்பில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சுகாதார சீர்கேடாகக் காணப்பட்ட பெருமளவிலான உணவுப் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
மேலும், உணவகப் பணியாளர்களின் மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் சமையலறைகளின் தூய்மை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.











ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam