பொதுச் சுகாதார பரிசோதகர்களும் தொழிற்சங்கப் போராட்டத்தில்
பொதுச் சுகாதார பரிசோதகர்களும் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கத் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கம் தாதியர்களின் கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக் கொண்டு ஏனைய சுகாதாரப் பணியாளர்களுக்கு அநீதி இழைத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஒரு தொழிற்சங்கத்தின் கோரிக்கையை மட்டும் ஏற்றுக் கொள்வதன் மூலம் ஏனைய தொழிற்சங்கங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
20000 ரூபா சீருடை கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு குறித்த பொறிமுறைமை ஆகிய தாதியர் சங்க கோரிக்கைகள் குறித்து ஏனைய சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து தீர்மானித்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஒரு தொழிற்சங்கத்தின் கோரிக்கையை மட்டும் ஏற்றுக் கொண்ட ஜனாதிபதியின் தீர்மானம் அதிருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
