வற்றாப்பளையில் உள்ளக வீதிகள் சீரின்மை! நிலைமைகளை நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள உள்ளக வீதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதால் அந்த வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இந்தநிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (11) குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
கோரிக்கை
குறிப்பாக வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் பள்ள வெளி 01ஆம் குறுக்கு வீதி,04ஆம் குறுக்குக்குவீதி, 05ஆம்குறுக்குவீதி மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளன.

ஆகவே இந்த வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு குறித்த விதிகள் சீரமைத்து தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் மக்களால் இதன்போது கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலைமைகள் தொடர்பாக நேரடியாக பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், கோரிக்கைகளை எழுத்து மூலமாக கையளிக்குமாறு தெரிவித்ததுடன், குறித்த வீதிகளின் சீரமைப்புத் தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam