பொதுவெளியில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! மீண்டும் கொடூர நடவடிக்கைகள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியதால் அங்கு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைப்பற்றினார்கள்.
பொது இடத்தில் தூக்கிலிட்டு மரண தண்டனை
அதன்பிறகு அங்கு மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்தனர். குறிப்பாக பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொலை குற்றம் சாட்டப்பட்ட குறித்த நபரை பொது இடத்தில் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நபர் கடந்த 2017ஆம் ஆண்டு ஒருவரை கொன்று மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திருடி சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த மரண தண்டனை மேற்கு மாகாணத்தின் தலைநகரான பாராவில் நிறைவேற்றப்பட்டது.
“மேற்கு பாரா மாகாணத்தில் 2017-ம் ஆண்டு ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆப்கானிஸ்தானில் பொது வெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதன் மூலம் 1990ஆம் ஆண்டுகளில் இருந்த தலிபான்கள் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான தண்டனைகள் மீண்டும் திரும்பியுள்ளது” என தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹில்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.
